போலீஸையே அடிக்குறியா..? நீ என்ன கேங்க்ஸ்டரா? அருண்விஜய்யின் 'மிஷன்' டீசர்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

அருண் விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’அச்சம் என்பது இல்லையே’ என்ற திரைப்படம் சமீபத்தில் ’மிஷன்’ என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ’மிஷன்’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டு இருக்கும் லண்டன் சிறையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.



இந்த சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக எமி ஜாக்சன் இருக்கும் நிலையில் இந்த சிறையில் இருக்கும் அருண் விஜய் தப்பித்து தனது குழந்தையை பார்க்க வேண்டும் என்று எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்த படம் நிச்சயம் அருண் விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஊரு ஒண்ணா இருக்க என் தலையை வெட்டி கொடுக்கவும் தயார்.. 'இராவண கூட்டம்' டிரைலர்..!

 நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை கயல், நடிகர் பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவான 'ராவண கூட்டம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன்

கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் விவகாரம்.. நடிகை அபிராமி கருத்துக்கு சின்மயி பதிலடி..!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி நடந்த மாணவிகளுக்கு நடந்த பாலியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன?

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் அர்ச்சகர்கள் ஐந்து பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இரட்டை குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் நயன் - விக்கி சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பெயர் வைத்த நிலையில் தற்போது இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

மகள்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் எங்கே சென்றிருக்கிறார் தெரியுமா? வைரல் வீடியோ..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது மகள்களுடன் கேரளாவில் உள்ள கபினி அணை அருகே சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.