எதிர்பார்த்த அதே டைட்டில் தான்.. அருண் விஜய் அடுத்த படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மாலை டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகனாக இருந்தும் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் தான் தற்போது படிப்படியாக வெற்றி படங்களை தந்து கொண்டிருப்பவர் அருண் விஜய் என்பதும் கூடிய விரைவில் அவர் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அருண் விஜயின் 36வது படத்தை ’மான்கராத்தே’ இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரெட்ட தல’ என்று டைட்டில் வைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான அட்டகாசமான போஸ்டரில் ’ரெட்ட தல’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அருண் விஜய்யின் அட்டகாசமான ஆக்சன் காட்சியின் போஸ் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
மேலும் இந்த படத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்த சித்தி இத்யானி, தன்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Happy to launch the first look of @arunvijayno1’s #RettaThala. Double the action, double the entertainment.
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 23, 2024
Best wishes to the entire team.
Produced by - @BTGUniversal @bbobby
BTG Head of Strategy - @ManojBeno
Directed By - #KrisThirukumaran
@SiddhIdnani @actortanya… pic.twitter.com/fCjUFX4RSg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com