கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'
- IndiaGlitz, [Friday,July 29 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டி தற்போது ரூ.400 கோடி இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்த விநியோகிஸ்தர்கள் பெரும் லாபம் அடைந்து அவர்கள் ரஜினிக்கும், படக்குழுவினர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் சிங்கப்பூர் ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகரும் பிரபல விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இதே மகிழ்ச்சியில் அவர் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் வெளிநாட்டு உரிமையையும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'விஜய் 60' படத்தை அருண்பாண்டியன் ரூ.16.75 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் படங்களில் இரண்டாவது பெரிய தொகை ஆகும். இதற்கு முன்னர் 'தெறி'யின் வெளிநாட்டு உரிமை ரூ.18 கோடிக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொத்த தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமை வியாபாரத்தில் இந்த படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் கபாலி', லிங்கா', எந்திரன்' மற்றும் 'தெறி' படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.