அருண்பாண்டியனின் 'சவாலே சமாளி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,August 07 2015]

ஊமை விழிகள், இணைந்த கைகள், ராஜ முத்திரை போன்ற பல படங்களில் நடித்த நடிகர் அருண்பாண்டியன் பின்னர் தயாரிப்பாளராகவும் மாறி செந்தூரப்பூவே, பேரண்மை, அங்காடித்தெரு, நந்தலாலா போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தயாரித்து வந்த 'சவாலே சமாளி' திரைப்படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஐஸ்வர்யா, கருணாஸ், ஜெகன், மனோபாலா, பரவை முனியம்மா உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவும், அஹ்மது படத்தொகுப்பும் இந்த படத்தில் செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியாக பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸாகவுள்ளதாலும், செப்டம்பர் 17-ல் விஜய் நடித்த 'புலி' ரிலீஸாகும் என எதிர்பார்ப்பு இருப்பதாலும், செப்டம்பர் 4ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக படக்குழுவினர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸாகி ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.