சூப்பர்ஹிட் பட ரீமேக்கில் நடிக்கும் அப்பா-மகள்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

கடந்த ஆண்டு வெளியான மலையாள சூப்பர் ஹிட் திரைப்படம் ’ஹெனல்’. அப்பா மகள் குறித்த உறவை கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாதியில் திடீரென மகள் காணாமல் போக, அப்பா மகளை தேடும் ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம்தான் இந்த ‘ஹெலன்’. இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது

‘ஹெலன்’தமிழ் ரீமேக் படத்தில் அப்பா மற்றும் மகள் கேரக்டரில் உண்மையான அப்பா மகளாகிய அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை கோகுல் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

அருண்பாண்டியனின் ஏ&பி குரூப்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பதும் படக்குழுவினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பிரபல நடிகர் இயக்கிய படத்தில் பாடகராகிய ரோபோ சங்கர்

'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவராட்டம்' உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கி வரும் திரைப்படம் 'கன்னிமாடம்'

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்து சூப்பர் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும்

சிறுத்தைக்கும் ராட்சத பல்லிக்கும் நடக்கும் சண்டை..! வைரல் வீடியோ.

வீடியோவில் ஒரு ராட்சச பல்லி தன்னைவிட வலிமை மிகுந்த சிறுத்தையுடன் தன்  உயிரைத் தற்காத்துக்கொள்ளப் போராடுகிறது. 

"என்னைப் போலவே விளையாடும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா"..?! சச்சின் டெண்டுல்கரின் பதில்.

எனக்கு எப்போதும் ஒப்பீடுகள் பிடிக்காது. என்னை பலருடன் ஒப்பிடப் பார்த்தனர், எங்களை எங்களாகவே இருக்க விடுங்கள். நாம் ஒப்பீடுகளுக்குள் செல்ல வேண்டாம்.

மனித இனப்பெருக்கத்திற்கும் கோவில் கும்பத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? வரலாற்றுப் பின்னணி என்ன?

கும்பம், பூரணக் கும்பம், கலசம் என்று பல பெயர்களுடன் கோவில் கோபுரத்தில் இருக்கும் கும்பத்தைப் பற்றி நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்து மதத்தின் சடங்கு பொருட்களில் ஒன்று என்பது மட்டுமே.