'நெருப்புடா', 'வர்லாம் வர்லாம் வா' புகழ் அருண்காமராஜின் அடுத்த அவதாரம்

  • IndiaGlitz, [Wednesday,August 30 2017]

பிரபல பாடலாசிரியர், பாடகர் அருண்காமராஜ் என்றவுடன் அவர் 'கபாலி' படத்திற்கு பாடிய 'நெருப்புடா' பாடலும், 'பைரவா' படத்திற்கு பாடிய 'வர்லாம் வர்லாம் வா' பாடலும் தான் அனனவருக்கும் ஞாபகம் வரும்.

பாடலாசிரியர், பாடகர் என புகழ்பெற்று வரும் அருண்காமராஜ் விரைவில் அடுத்த அவதாரத்தை தொடங்கவுள்ளார். ஆம், அருண்காமராஜ் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்

அருண்காமராஜின் முதல் படம் மகளிர் கிரிக்கெட்டை பற்றி பேசப்போகிறதாம். சமீபத்தில் மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கெளரவப்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பெண் கிரிக்கெட் போட்டியில் எப்படி போராடி வெற்றி பெறுகிறார் என்று இந்த படம் இருக்கும் என்றும், அதுமட்டுமின்றி அப்பா-மகள் உறவின் மேன்மை குறித்தும் இந்த படம் பேசும் என்றும் அருண்காமராஜ் கூறியுள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதையை மகளிர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னரே தான் எழுதிவிட்டதாகவும், இருப்பினும் இந்த படத்தை இயக்க இது சரியான நேரம் என்று தான் கருதுவதாகவும் அருண்காமராஜ் கூறினார். அருண்காமராஜின் முதல் படம் இன்னொரு 'டங்கல்' ஆக இருக்க வாழ்த்துவோம்.

More News

விஜய்சேதுபதி-உதயநிதி ஸ்டாலின் இணையும் முதல் திரைப்படம்

கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துவிட்ட நடிகர்களின் பட்டியலில் விஜய்சேதுபதியும், உதயநிதி ஸ்டாலினும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே...

'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் எப்போது? விக்னேஷ் சிவன் தகவல்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இயக்குனர் அதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்...

அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் இணைந்த வெற்றி பட நடிகை

'துருவங்கள் 16' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படமான 'நரகாசுரன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அஜித்தின் 'விவேகம்' வசூல் குறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வசூல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் பல செய்திகள் அதிகாரபூர்வமற்ற செய்தியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது...

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாராலும் கைப்பற்ற முடியாது: விவேக் ஜெயராமன் பதிலடி

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் நடந்தபோது நான்கு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது...