சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடியுந்தருவாயில் உள்ளதால் ஸ்டிரைக் முடிந்தவுடன் ஒருசில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும் பாடகர்-பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கி வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஸ்டிரைக் முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது

இதுகுறித்து அருண்காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'முதல் கட்ட படப்பிடிப்பினை வெற்றிகரமாக முடிக்க அர்ப்பணிப்புடன் உழைத்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா-மகளாக நடித்து வரும் இந்த படத்தில் நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள்.

More News

முதல் ஆளாக பத்ம விருதை பெற்ற இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார். இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட முதல் விருது இசைஞானிக்கு என்பது குறிப்பிடத்தக்கது

சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு: தினேஷ் கார்த்திக்

இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த தினேஷ் கார்த்திக்,

தளபதி விஜய்யை கலாய்த்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இன்று படப்பிடிப்பு நடந்தது

கடைசி ஒரு பந்தில் 5 ரன், மனநிலை எப்படி இருந்தது: தினேஷ் கார்த்திக்

சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியின் இறுதிபோட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி,

களத்தில் இருக்கும்போது தமிழில் பேசுவது ஏன்? தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் விளையாடினாலும், தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய்சந்தருடன் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.