அப்ப அது 'விஸ்வாசம்' படத்தின் பாடல் இல்லையா?

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரி இணையத்தில் வைரலானது. அஜித்தின் ஓப்பனிங் பாடலின் வரிகள் இவை என்றும் கூறப்பட்டது.

பாடலாசிரியர் அருண்பாரதி எழுதிய 'எத்தனை உயரம் இமயமல, அதில் இன்னொரு சிகரம் எங்க தல' என்ற இந்த பாடல் வரிகள் அஜித்தின் ஓப்பனிங் பாடல் வரிகள் என்பதை அறிந்து அஜித் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் சற்றுமுன் பாடலாசிரியர் அருண்பாரதி, 'சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த வரிகள் 'விஸ்வாசம்' படத்தின் பாடல் வரிகள் இல்லை' என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அருண்பாரதி கூறியதாவது: வணக்கம். என் மனதில் மரியாதைக்குரியவராய் நிற்கும் அஜித் சார் ரசிகர்களின் அன்புக்காகவும், உற்சாகத்திற்காகவும் எழுதிய வரிகளே அன்றி அந்த வரிகளை விஸ்வாசம் படத்தில் நான் எழுதவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருண்பாரதியின் இந்த தகவலால் மேற்கண்ட பாடல் வரிகள் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடல் வரிகள் இல்லை என்பதை அறிந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

More News

செக்க சிவந்த வானம்: 5 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்த இயக்குனர்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

பிரபல நடிகையின் கலையம்சத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான Farrah Kader என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கலைநயத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு விஷால் செய்த மிகப்பெரிய உதவி

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்கும்போது தன்னுடைய படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும்

காதலரை கைப்பிடிக்கும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் பெற்று தந்தார் என்பது தெரிந்ததே.

தனுஷ்-சிம்பு பட நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', மற்றும் சிம்பு நடித்த 'குத்து' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் முன்னாள் எம்பியுமான ரம்யா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திரமோடியை 'திருடன்'