பொய் மேல் பொய்களை அடுக்கி கொண்டே போகும் அருண்.. ரசிகர்கள் போட்ட குறும்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது விஜய் சேதுபதி குறும்படம் போட்டாலும் பார்வையாளர்களே சமூக வலைதளங்களில் போடும் குறும்படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அருண் உள்பட கிச்சன் டீமில் உள்ளவர்கள் நள்ளிரவில் தனியாக சமைத்து சாப்பிட்டதை மஞ்சரி எடுத்துச் சொல்ல அதற்கு அருண் நல்லவர் போல் வேஷம் போட்டு கூறும் காட்சிகளை நெட்டிசன்கள் குறும்படமாக பதிவு செய்து வருகின்றனர்.
மஞ்சரி சொன்ன வார்த்தை என்னை மிகவும் வருத்தப்படுத்தியது, எல்லாவற்றையும் ஒளித்து வைத்து சாப்பிடுகிறீர்கள் என்று அவர் சொன்னது எனக்கு கவலையாக இருந்தது என்று அருண் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவர் முந்தைய நாள் இரவில் இது மாதிரி ஒளித்து வைத்து சாப்பிடுவது சொர்க்கமே கண்ணுக்குள் இருக்கிற மாதிரி தெரிகிறது என்று அருண் கூறும் காட்சிகள் நெட்டிசன்களின் குறும்படத்தில் உள்ளன.
தர்ஷிகாவிடம் மஞ்சரி இது குறித்து விளையாட்டாக கூறியதை தர்ஷிகா சீரியஸ் ஆக எடுத்துக் கொண்ட காட்சியும் அதே தர்ஷிகா நள்ளிரவில் சாப்பிடும் போது இது மாதிரி ஒளித்து வைத்து சாப்பிடுவது எந்த சீசனிலும் இருந்ததில்லை, இந்த சீசனில் தான் இருக்கிறது என்று சந்தோசமாக கூறிய காட்சியையும் நெட்டிசன்கள் பகிர்ந்து உள்ளனர். மேலும் மொத்த போட்டியாளர்களும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதை விட ஒரு ஐந்து பேர் இப்படி சாப்பிடுவதால் தான் கிக் இருக்கிறது என்று தர்ஷிகா கூறுகிறார்.
அதேபோல் அருண் ’சாப்பாட்டை தூக்கிக்கிட்டு ஓரமாக செல்லும் போது நான் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் உணர்ந்தேன், மஞ்சரி கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கூற, அதே அருண் சாப்பிடும் போது கூறிய காட்சிகளும் மாறி மாறி நெட்டிசன்கள் குறும்படமாக பதிவு செய்துள்ளனர்.
மொத்தத்தில் ’அருண் பொய் சொல்லலாம், ஆனால் அதுக்காக இப்படியா? நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். இந்த பொய்களை வெளிப்படுத்தும் வகையில் இன்று விஜய் சேதுபதி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஜய் சேதுபதி என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Ithu namba kaatra Kurumbadam 😁#ArunPrasath poi sollalam athukaga ipdiya#BiggBossTamilSeason8 #BiggBossTamil8 #BiggBossTamil #BiggBoss #VijaySethupathi #vijaytv #BiggBossSeason8Tamil pic.twitter.com/ckXDCHy1V7
— LαԃყႦιɾԃ🕊️ (@LunaDmoon_) November 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout