கோலிவுட் திரையுலகில் நடந்த இரண்டாவது அதிசயம்.

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

கடந்த சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி நடித்த படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது அதே கட்சி ஆட்சி புரிந்தாலும் இந்த விஷயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் உதயநிதி நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்திற்கு ரிலீசுக்கு முன்பே எந்தவித பிரச்சனையும் இன்றி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைத்தது. இதை கோலிவுட்டே ஆச்சரியத்தில் பார்த்தபோது தற்போது அருள்நிதி நடித்த 'பிருந்தாவனம்' படத்திற்கும் தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளதை இரண்டாவது அதிசயமாக கோலிவுட்டினர் கருதுகின்றனர். ஆனாலும் வரும் ஜூலை முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்படவுள்ளதால் இந்த அதிசயங்கள் தொடர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, தான்யா,விவேக் நடித்துள்ள 'பிருந்தாவனம்' படத்திற்கு வரிவிலக்கு கிடைத்துள்ளதால் தயாரிப்பு தரப்பும் விநியோகிஸ்தர்கள் தரப்பும் உற்சாகத்தில் உள்ளது. வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள இந்த படம், ராதாமோகனின் மற்றொரு தரம் வாய்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லைகா நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது...

உதட்டு முத்தக் காட்சியில் சிபிராஜ் நடிக்க மறுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் அனுமதி பெற்று 'சத்யா' டைட்டிலை பெற்ற படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர்...

பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் புகழின் உச்சத்தை அடைவார்கள் என்பது உறுதி. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களில் ஒருவரான ரோ

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு, பாடதிட்டம் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த இரண்டு வகுப்புகளிலும் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு கைது வாரண்ட்

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியானது.