ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும். போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர்களின் ஆதரவு பெருமளவு இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், பிரபல நடிகருமான அருள்நிதி சாலையில் உட்கார்ந்து போராடி வருகிறார். தான் அரசியல் செய்வதற்காக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், ஒரு நடிகனாக, பொதுமக்களில் ஒருவனாக, குறிப்பாக ஒரு தமிழனாக இங்கே உட்கார்ந்து போராடி வருவதாகவும், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்க வேண்டும் என்பதை தவிர தனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றும் கூறினார்.
மேலும் ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகவும் ஒரு காரணம் என்பதால், போராடி வரும் இளைஞர்களை போல நீங்களும் திமுகவை எதிர்ப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யார் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பேன்' என்று அதிரடியாக கூறியுள்ளார்,.
Good reply by @arulnithitamil to cheap media @srini7489 @karthiykj @gokula15sai @JAnbazhagan @TRBRajaa @saysatheesh pic.twitter.com/t56g1sVtv0
— பிரபாகரன் (@Karanpraba) January 19, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com