நம்ம பயலை சாவடி, சாதிக்காக செத்து சாமியாக்கட்டும்: 'கழுவேத்தி மூர்க்கன்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடிப்பில் உருவான ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அருள்நிதி கிராமத்து மூர்க்கன் கேரக்டரில் அதிரடியாக நடித்துள்ளார் என்பதும் ஆக்சன் காட்சிகளில் அவர் தெறிக்க வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் கிராமத்து அரசியலை கண்முன்னே வைக்கும் வகையில் உள்ளது.
”நீங்க தலைக்கு மேல இருக்கீங்கன்னு நெனச்சிட்டு இருக்கீங்க, ஆனா இன்னொருத்தன் நீங்களே அவன் காலுக்கு கீழ இருக்கீங்கன்னு சொல்லிட்டு இருக்கான்”
”ஓட்டு போடறதுக்கு நல்லவனா கெட்டவனா என்று யாரும் பார்க்கறது இல்ல, நம்ம சாதிக்காரனான்னு தான் பாக்குறாங்கா”
”சாதி நமக்கு சாமி மாதிரி. ரொம்ப பேர உக்கார வச்சு சோறு போட்டுக்கிட்டு இருக்கு”
”நல்லவன்னு சொன்னாலும் கெட்டவன்னு சொன்னாலும் இந்த ஊரு நம்மள பத்தி தான் பேசணும்”
கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் சாயாதேவி முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com