'த்ரிஷ்யம்' இயக்குனரின் ரீமேக் படத்தில் அருள்நிதி-ஐஸ்வர்யா ராஜேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படமான 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்துஜோசப், கடந்த 2013ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் 'மெமோரிஸ்'. இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பிரித்விராஜ், முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அருள்நிதி நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
அருள்நிதியின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், சமீபத்தில் அருள்நிதி-ஐஸ்வர்யா ராஜேஷின் திருமண காட்சி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பது குறித்து கருத்து கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், 'ஆம் நான் அருள்நிதியின் மனைவியாக 'மெமோரீஸ்' தமிழ் ரீமேக்கில் நடிப்பது உண்மைதான். இந்த படம் எனக்கு கண்டிப்பாக ஒரு திருப்புமுனையை தரும் என்று கூறினார். மேலும் நடிகர் சங்க தேர்தல் குறித்து கூறிய ஐஸ்வர்யா, சரத்குமார், விஷால் அணியினர் தேர்தலில் மோதுவது குறித்து கருத்து கூற விரும்பவில்லை, ஆனால் விஷால் எனது நண்பர் என்பதால் அவர் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout