அருள்நிதியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ’டி பிளாக்’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தேஜாவு’. இந்த படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இந்த படம் அருள்நிதியின் பிறந்தநாளான ஜூலை 21ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அருள்நிதியின் பிறந்தநாளான ஜூலை 21ம் தேதிக்கு அடுத்த நாள் ஜூலை 22ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.
#dejavu from July 22nd ?????? pic.twitter.com/4Ct70lULod
— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments