'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் எப்போது? அருள்நிதி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்து வரும் ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகன் அருள்நிதி படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
’கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த படம் மே 26ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அம்பேத்கர் பின்னணியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகிறது.
கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KazhuvethiMoorkan Getting released in Cinemas in May 2023…
— Arulnithi tamilarasu (@arulnithitamil) May 5, 2023
⭐️Strarring @arulnithitamil @officialdushara @ActorSanthosh
Director: "Raatchasi" @sy_gowthamraj
Production: @OlympiaMovis
Producer: @ambethkumarmla
DOP: @Sridhar_DOP
Music: @immancomposer@cheqba @inagseditor pic.twitter.com/kPDvH8g558
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments