அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வேற லெவல் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

அருள்நிதி நடிப்பில் உருவாகி வந்த ’கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

மேலும் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் மே வெளியீடு என்ற அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான வேற லெவல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ’கழுவேத்தி மூர்க்கன்’ மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம ராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த நடிகை துஷாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென மாலையும் கழுத்துமாக பிக்பாஸ் ஜூலி.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'கங்குவா' படத்திற்காக வேற லெவலுக்கு மாறிய சூர்யா.. மாஸ் புகைப்படம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் இணைய தளங்களில் வெளியாகி

'லியோ'வில் நான் நடிக்கிறேனா? ரத்னகுமார் ஹிண்ட்-க்கு விஜய் சேதுபதி பதில்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ரத்னகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில்

'ஃபர்ஹானா' எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம்: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை..!

 ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'ஃபர்ஹானா' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு

டிஸ்னி ஹாட்ஸ்டார்  ஓடிடியில்   ஐஸ்வர்யா ராஜேஷின் 'சொப்பன சுந்தரி': ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'சொப்பன சுந்தரி' என்ற திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நாளை முதல் அதாவது மே 12 முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக