அருள்நிதியின் 'K13' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ல் இருந்து மே17க்கு மாற்றப்பட்டதால் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

மே 1ஆம் தேதி கவுதம் கார்த்திக்கின் 'தேவராட்டம்' ரிலீஸ் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் அருள்நிதியின் 'K13' திரைப்படம் அதே மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷனும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் , ரூபன் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.