அருள்நிதி ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. 3ம், 4ம் பாகமும் உருவாகும் என தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் மற்றும் நான்காம் பாகமும் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ’டிமான்டி காலனி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ’டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் மற்றும் நான்காம் பாகமும் உருவாகும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாம் பாகத்திற்கான சில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் எனவே இந்த படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments