close
Choose your channels

எது நடக்கப்போவது என்று நினைத்தேனோ அது இப்ப நடக்க போகுது: 'டிமாண்டி காலனி 2' டிரைலர்..!

Wednesday, July 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமான்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’டிமான்டி காலனி 2’ திரைப்படம் வருமான ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் அருள்நிதி அசத்தலான நடிப்பு, பிரியா பவானி சங்கர் மிரட்டல் நடிப்பு, அஜய் ஞானமுத்து இயக்கிய திகில் காட்சிகள், அட்டகாசமான சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகள் என படம் முழுவதும் முதல் பாகத்தை விட பல மடங்கு சுவாரசியமான காட்சிகள் உள்ளன

குறிப்பாக சாம் சிஎஸ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார் என்பதும் ஒளிப்பதிவு எடிட்டிங் ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் என டிரைலரை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே ஒரு பெர்பெக்ட் இரண்டாம் பாகமாக இந்த படம் இருக்கும் என்றும் நிச்சயம் முதல் பாகம் போலவே இந்த படமும் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்ற சில வசனங்கள் இதோ:

டிமாண்டி வீட்டை விட்டு அந்த செயின் எங்க போனாலும், ஏதாவது ஒரு வழியில் அந்த செயின் மீண்டும் அதே வீட்டுக்கு வந்து சேரும்.

எது நடக்கப் போவது என்று நினைத்தேனோ அது இப்ப நடக்க போகுது.

அந்த செயின் டிமாண்டி வீட்டை விட்டு வெளியே வந்துருச்சு, அது நம்மள பழி தீர்க்காமல் விடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment