அருள்நிதியின் அடுத்த பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி தனக்கேற்ற கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக ’மௌனகுரு’ ’டிமான்டி காலனி’ ’ஆறாது சினம்’ போன்ற படங்கள் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்ததோடு வெற்றி படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருள்நிதியின் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. ’D-ப்ளாக்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரான் எத்தன் யொஹான் இசையமைத்துள்ளார் என்பதும் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எருமைச்சாணி குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த படம் அருள்நிதிக்கு மற்றொரு வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.