'கபாலி'யின் 'நெருப்புடா' விஜய்யையும் பற்றிக்கொள்ளுமா?
- IndiaGlitz, [Thursday,July 28 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல்தான் இன்று பலரின் ரிங்டோனாக உள்ளது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலை எழுதி பாடிய அருண்காமராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று திடீரென இளையதளபதி விஜய்யிடம் இருந்து அருண்காமராஜூக்கு அழைப்பு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அருண்காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஜய் தற்போது நடித்து வரும் 'விஜய் 60' படத்திற்கு 'கபாலி'க்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவதும், விஜய் 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜை சந்தித்ததையும் வைத்து பார்க்கும்போது 'விஜய் 60' படத்திலும் 'நெருப்புடா' போன்ற அதிரடி பாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த 'தெறி' படத்தில் அருண்காமராஜ், 'டப் தெறி ஸ்டெப்' என்ற பாடலை எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.