ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தத்ரூபமாக ஓவியம் வரையும் ஓவிய கலைஞரான இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த செய்தி திரையுலக பிரபலங்களையும் ஓவிய கலைஞர்களையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கும்பகோணத்தைச் சேர்ந்த செம்பியவரம்பு என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜா சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் வல்லவராக இருந்தார். இவரது ஓவியங்கள் அச்சுஅசலாக உயிர் உள்ளது போன்று இருக்கும் என்பதால் பலர் அவரது ஓவியங்களைப் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்
இந்த நிலையில் இளையராஜாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதித்த நிலையில் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது நுரையீரலில் நோய் பரவியதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஓவியர் இளையராஜா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ஓவிய கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
ஓவியர் இளையராஜா மறைவு குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியிருப்பதாவது: நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?
ஓவியர் இளையராஜா அச்சுஅசலாக உயிருள்ள இருப்பவர்கள் போலவே ஓவியம் வரைந்துள்ளார். குறிப்பாக அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்த பெண், ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் பெண், பூப்பெய்த நேரத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் எனப் பலவிதமான ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். இவரது ஓவியங்களைப் பார்த்த பலரும் இது ஓவியமா அல்லது புகைப்படமா என்று கூட சந்தேகம் அடைந்திருக்கிறார்கள். ஆனந்த விகடன் உள்ளிட்ட பல ஊடகங்களில் இவரது ஓவியங்கள் வெளியே வந்து உலகப் புகழ் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தத்ரூபமாக ஓவியங்கள் வரைவதில் வல்லவரான இளையராஜாவின் மறைவு ஓவிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments