காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.

கடந்த 1949-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட இந்த 370வது சட்டப்பிரிவின்படி காஷ்மிரில் ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு துறை ஆகியவை தவிர பிற துறைகள் குறித்து நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் இயற்ற முடியாது. அதேபோல் காஷ்மீரின் எல்லையை கூட்டவோ, குறைக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்த சட்டப்பிரிவு கூறுகின்றது. மேலும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் பிறமாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கலாம், ஆனால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. இந்த சட்டப்பிரிவை நீக்கவோ, மாற்றம் செய்யவோ வேண்டும் என்றால் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.

மேலும் இந்த சட்டப்பிரிவின்படி காஷ்மீரை சாராதவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்ய முடியாது. அதேபோல் காஷ்மீர் மாநில பெண் வேறு மாநில நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அந்த பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை.

தற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த சட்டப்பிரிவை நீக்க ஜனாதிபதியின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்பதால் தற்போது அதிரடியாக இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, ''பிரிவு 370 காரணமாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இம்மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் இருந்ததாகவும், காஷ்மீரில் 3 குடும்பங்கள் மட்டுமே இத்தனை வருடங்களாக கொள்ளையடித்து வந்ததாகவும், தற்போது அம்மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அமித்ஷாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்திவிட்டதாகவும், இந்த நடவடிக்கை எமெர்ஜென்சியை நினைவுபடுத்துவது போல் உள்ளதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இரவோடு இரவாக கபடத்தனமாக காஷ்மீர் பிரிப்பு மசோதாவை அரசு தயார் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

More News

அபிராமியால் டென்ஷன் ஆன முகின்: உடைந்த பிக்பாஸ் வீட்டின் பொருட்கள்

கடந்த வாரம் முழுவதும் கவின், சாக்சி, லாஸ்லியா முக்கோண காதல் அனைவருக்கும் திகட்டும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஓடிய நிலையில் இந்த வாரம் இந்த அலை சற்று ஓய்ந்துள்ளது.

சாக்சி வெளியேறாதது ஏன்? ரேஷ்மாவிடம் விளக்கிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கவின், லாஸ்லியா மட்டுமன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்கள் அனைவரையும் வெறுப்பேற்றிய சாக்சி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறுவார்

ஆகஸ்ட் 11 முதல்... ஜிவி பிரகாஷின் அடுத்த பட அப்டேட்

இந்த ஆண்டு 'சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில்

தனுஷ் வெளியிட்ட 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது படைப்பாக தயாரிக்கும் திரைப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்க உள்ளதாக

சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'காப்பான்'.