close
Choose your channels

சிம்பு 48 .. ராஜமௌலி-சஞ்சய் லீலா பன்சாலி இணைந்த படம் போல் இருக்கும்: பிரபலம் கூறிய தகவல்..!

Saturday, August 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கும் நிலையில் இந்த படம் ராஜமெளலி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என திரை உலக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த நிறுவனம் பின் வாங்கி விட்டதாகவும் இதனை அடுத்து வேறொரு பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’தங்கலான்’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த எஸ்எஸ் மூர்த்தி தான் ’சிம்பு 48’ படத்திலும் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் ’சிம்பு 48’ படம் என்றும் இது ஒரு பாகுபலி மாதிரியான வரலாற்று திரைப்படம் என்றும் ராஜமெளலி மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி பிரமாண்டமாக இந்த படம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment