பிரபல திரைப்பட கலை இயக்குனர் காலமானார்

  • IndiaGlitz, [Thursday,September 21 2017]

பிரபல திரைபட கலை இயக்குனர் ஜிகே என்கிற கோபிகிருஷ்ணா நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 60

கடந்த சில நாட்களாக இருதய பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜிகே, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் காலமானார்

மறைந்த கலை இயக்குனர் ஜிகே அவர்களுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், கிருஷ்ணா என்ற மகனும் ஹேமச்சந்திரா என்ற மகளும் உள்ளனர்.

மறைந்த ஜிகே அவர்களின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் இறுதிமரியாதை செலுத்தி வருகின்றனர். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்

More News

எல்லோரும் எவ்வளவு வெட்டி என்பது இதிலிருந்து தெரிகிறது. காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி வெளியேறி பல வாரங்கள் ஆகிவிட்டாலும் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் ரசிகர்கள் உள்பட பலர் வசை பாடுவதை இன்னும் நிறுத்தவே இல்லை.

கபிலன் வைரமுத்துவின் ஆவணப்படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்

கபிலன் வைரமுத்து அவர்களின் 'இளைஞர்கள் என்னும் நாம்' என்னும் ஆவணப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார்.

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க காஜல் செய்த தந்திரம்

தளபதி விஜய் படம் என்றாலே நடிப்பு, ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், என அனைத்தும் கலந்து ஒரு பொழுதுபோக்கு படத்திற்கு உத்தரவாதமாக இருக்கும்.

ராம்ரஹிம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்: திடுக்கிடும் தகவல்

தேரா ஷச்சா ஆசிரமத்தின் சாமியார் ராம் ரஹிம் சிங் 30 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆசிரமத்தை கடந்த சில நாட்களாக போலீஸ் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது.