ஆப்கானிஸ்தான் விவகாரத்தால் நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்யும் பிக்பாஸ் நடிகை?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணத்தால் தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளிவந்தது செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 11 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை அர்ஷிகான். இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இவரது தந்தையார் ஏற்பாடு செய்திருந்தார். மணமகனின் தந்தையும் அர்ஷிகான் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் திருமண நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்துவிட்டு நண்பர்களாக இருக்கலாம் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரிடம் அர்ஷிகான் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் என்னுடைய தந்தை எனக்கு ஒரு நல்ல இந்தியனை திருமணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அர்ஷிகான் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout