யுடியூப் தான் குரு....! பேங்கில் திருட திட்டமிட்டவர்கள் கைது....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவில்பட்டி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேங்குகளில் களவாட திட்டமிட்டுள்ளனர், அதே ஊரைச் சார்ந்த நபர்கள்.கோவில்பட்டியில் இருக்கும் எஸ்பிஐ வங்கியை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாக, காவல் துறையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபரை பற்றி விசாரித்ததில், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி என்பதை கண்டறிந்தனர். அவரின் செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசார் வழியாக கண்காணித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்துள்ளது.
கோவில்பட்டியில் இருக்கும் எஸ்பிஐ வங்கி மற்றும் விருதுநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்டவற்றில், கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு உதவுவதே IOB- வங்கியில் உதவி மேலாளராக இருந்து வந்த, வாஷிங்டன் என்றும் கணடறியப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்பாக்கத்த்தில் உள்ள ஆண்டனி, கீழக்கரையில் வசிக்கும் குமார், கமுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி உள்ளிட்டோர் கூட்டாளிகளாகவும், வாஷிங்டன் தான் இவர்களுக்கு தலைமை வகிப்பதாகவும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் வாஷிங்டன் வங்கியில் 98 லட்சம் கையாடல் செய்ததால், வங்கி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் தான் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
கோவில்பட்டி பேங்க் குறித்த தகவல்களை வெள்ளைச்சாமி தான் வாஷிங்டன்-க்கு தெரிவித்துள்ளார். உள்ளூரில் இதற்கு ஒரு நபர் தேவைப்பட்டதால், சாமியே தன்னுடைய நண்பரான வெள்ளைப்பாண்டியை சேர்த்துக்கொண்டு, அவருக்கு முன்பணமாக 1 லட்சத்தையும் கொடுத்துள்ளார். இதேபோல் விருதுநகர், நள்ளியில் இருக்கும் IOB வங்கியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை அறிந்திருந்த வாஷிங்டன், அதில் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்து பல யுடியூப் வீடியோக்களை பார்த்துள்ளார். மேலும் வங்கியில் பணம் எந்த இடத்தில் இருக்கும்? வங்கிக்குள் எப்படி நுழைவது...? போன்ற விஷயங்களை, கூட்டாளிகளுக்கு கத்துக்கொடுத்துள்ளார்.
இத்தனை நிகழ்வுகளையும் செல்போன் மூலம் தெரிந்துகொண்ட காவல்துறையினர், அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதுபோன்று கொள்ளையடித்துள்ளார்களா....? இவர்களுக்கும் வேறு கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் இவர்களை விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout