விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும்: திருநங்கைகள் போர்க்கொடி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய்சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் விஜய்சேதுபதியின் திருநங்கை நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு திருநங்கைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருநங்கை ரேவதி என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளை கடத்துபவர்களா? எப்போது மும்பையில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்தினார்கள்? அதை நீங்கள் பார்த்தீர்களா? திருநங்கைகளின் மனதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள். கதையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏன் இந்தப் படத்தை புறக்கணிக்கவில்லை. ஒரு குழந்தை பெற்ற பின்பு அவர் திருநங்கையாக மாறியிருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருப்பதும், மனைவியிடமே புடவை வாங்கி உடுத்துவதும் என்ன அடிப்படையில் கதை? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்னொரு திருநங்கை கல்கி சுப்ரமணியம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 'சூப்பர் டீலக்ஸ்' படம் திருநங்கைகள் சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. முழுக்க முட்டாள்தனமான, தவறான சித்தரிப்பாக விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது அதேநேரத்தில் அதிர்ச்சிகரமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் சில்கி பிரேமா என்ற திருநங்கை கூறுகையில், விஜய் சேதுபதியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் 'தாதா 87' என்ற திருநங்கை படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இதுகுறித்து கூறியபோது, 'விஐய்சேதுபதி மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் என் மீது நடவடிக்கை எடுங்கள். நானும் திருநங்கைகள் பற்றி படம் எடுத்து விட்டேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout