ஓவியாவை கைது செய்ய வேண்டும்: மகளிர் அமைப்பு புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வெள்ளியன்று வெளியான '90ml' திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையே சீரழித்துவிட்டதாக கலாச்சார காப்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ''90ml' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்த ஓவியாவுக்கும் சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்தனர். பல ஓவியாவின் ரசிகர்கள், ஓவியா ஆர்மியில் இருந்து விலகிவிட்டதாகவும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments