முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்...! மோடிக்கு சவால் விட்ட அரசியல் தலைவர்......!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசிகள் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் குறைபாடு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால், மக்கள் இறந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலைநகரான டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் "எங்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்புனீர்கள் மோடிஜி..?" என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த இந்த கருப்பு நிற போஸ்டர்கள், மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியது. இதுகுறித்து டெல்லி காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர் , 17 நபர்களை கைது செய்துள்ளனர். ஆனால் கைதானவர்கள் வெறும் கூலிக்கு போஸ்டர் ஓட்டுபவர்களே. போஸ்டர்கள் ஒட்டியதிற்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து, காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "தைரியம் இருந்தால் என்னையும் கைது செய்துங்கள்" எனபிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
Arrest me too.
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments