'இந்தியன் 2' படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் சில நாட்கள் சென்னையிலும், அதன் பின் உலகின் எட்டு நாடுகளிலும் இந்த படம் உருவாகவுள்ளது. இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளும் முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் 'இந்தியன்' படத்திற்கு ஆஸ்கார் நாயகான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் 'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் இந்த படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 'இந்தியன் 2' படக்குழுவினர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷங்கர் அவர்களுக்கும் அவருடைய டீமுக்கும் மேலும் ஒரு வெற்றி படமாக இந்த படம் அமைய எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
'இந்தியன்' படத்தில் ரஹ்மான் இசையில் உருவான 'டெலிபோன் மணிபோல்' பாடல் இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் ரஹ்மானை தாங்கள் மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் பலர் இந்த டுவீட்டிற்கு கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
Wishing you and your team for yet another block buster ! Good luck buddy ?? https://t.co/7RzPBaH34n
— A.R.Rahman (@arrahman) January 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com