ஜப்பானில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த தமிழ் வரவேற்பு
- IndiaGlitz, [Saturday,September 17 2016]
ஆஸ்கார் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சமீபத்தில் ஜப்பான் நாட்டின் யோகோபோடியா என்ற அமைப்பு வழங்கும் ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டது.
ஆசிய கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் ஜப்பானின் ஃபுகுவோகா நகரின் பெயரில் யகாடோபியா அறக்கட்டளையுடன் இணைந்து ஆண்டு தோறும் ஃபுகுவோகா (Fukuoka Prize) விருது வழங்கப்பட்டு வருகிறது. Grand, Academic, மற்றும் Arts and Culture என மூன்று பிரிவுகளாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இந்த விருதில் ரஹ்மானுக்கு Grand பிரிவில் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த விருதை பெறுவதற்கு ரஹ்மான் சமீபத்தில் ஜப்பான் சென்றார். ரஹ்மானுக்கு ஜப்பான் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்த நிலையில் ஜப்பான் பள்ளி மாணவி ஒருவர் 'ரகுமான் அவர்களே வருக வருக, எல்லா புகழும் இறைவனுக்கே' என தமிழில் எழுதப்பட்ட பலகை கொண்டு ரஹ்மானை வரவேற்றார்.
இந்த மாணவியின் புகைப்படைத்தை ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.