close
Choose your channels

இமான் இசையில் பாடும் ரஹ்மான் பாடகி

Tuesday, June 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் 'பாயும் புலி' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில், இசையமைப்பாளர் டி.இமான் தற்போது முழுவீச்சில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக சமீபத்தில் 'சில்க் மரமே' என்று தொடங்கும் பாடல் ஒன்றை டி.இமான் ஒலிப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ உள்ள பாடல் இல்லை என்றும் மீடியமான வேகத்தில் செல்லும் இந்த பாடலை பாட, பாடகி ஷேஷாவின் குரல் பொருத்தமாக இருக்கும் என தான் கருதியதால் அவரையே பாட வைத்ததாகவும் இமான் கூறியுள்ளார்.

கனடாவில் பிறந்து வளர்ந்த பாடகி ஷாஷா திருப்பதி, ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த காவியத்தலைவன், கோச்சடையான், லிங்கா, ஓகே கண்மணி ஆகிய படங்களில் பாடியுள்ள சேஷா திருப்பதி ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ராஜாராணி, நிமிர்ந்து நில் போன்ற படங்களிலும் பாடியுள்ளார். ஓகே கண்மணி படத்தில் இவர் பாடிய பறந்து செல்லவா" என்ற பாடல் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷை அடுத்து தற்போது முதல்முறையாக இமான் இசையில் பாடியுள்ள இந்த பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment