மீடூ பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் முதல்முறையாக சின்மயி புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மீடூ குறித்த தகவல்களை பார்த்து கொண்டிருக்கின்றேன். குற்றஞ்சாட்டிய, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருசிலர் பெயர்கள் அதில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சினிமாத்துறையில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையாகவும் உள்ள துறையாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிக சக்தியுடன் வெளிவர வேண்டும்

நானும் என்னுடைய குழுவும் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், ஒரு பாதுகாப்பான பணிபுரியும் சூழல் உருவாக்கவும், அவற்றின் முலம் சிறந்த கலைஞர்கள் வெற்றி பெறும் சூழலை உருவாக்குவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சமூக வலைத்தளங்கள் ஒரு சிறந்த இடமாக உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தை தவறாக பயன்படுத்தாத வகையிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்