close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானின் 9.09 ரகசியம் என்ன தெரியுமா?

Wednesday, December 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று இரவு 9.09 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் கூறிய நேரமான 9.09 என்பது, அந்த ரகசியத்தை கிட்டத்தட்ட கூறிவிட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முறையாக தயாரிக்கும் திரைப்படம் '99 சாங்ஸ்'. இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பைத்தான் இன்று இரவு 9.09 மணிக்கு அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தில் ஏஹான் பட் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் தயாரிப்பது மட்டுமன்றி, இசையமைக்கவும் செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment