உதயநிதிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் உதவி

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

நடிகர் உதயநிதி நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'நிமிர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'நெஞ்சில் மாமழை' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இளம் இசையமைப்பாளர்களான தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இந்த பாடலை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உதயநிதி படத்திற்கு ஏ.அர்.ரஹ்மான் இதுவரை இசையமைக்கவில்லை என்றாலும் அவர் நடிக்கும் படம் ஒன்றின் பாடலை வெளியிடும் உதவியை செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷிண்ட பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஒரு போட்டோகிராபராக நடித்திருக்கிறார். உதயநிதியுடன்  நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.