ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த படத்திற்கு 'காற்றின் மொழி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜோதிகா நடித்த மொழி' படத்தின் பாடல் வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் உறவினர் ஏ.ஹெச். காசிப் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். 

இந்த படத்தில் பிரபல நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடிப்பதாகவும், பிரபல தெலுங்கு நட்சத்திரம் லட்சுமி மஞ்சு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பதும் தெரிந்ததே.

வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தனஞ்செயன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 

More News

திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளது.

பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்து வருகிறார்.

பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,.

காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.