19 வருடங்களுக்கு முன் தொடங்கிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2001ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் 'ஏலேலோ' என்ற திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் நான்கு பாடல்களை கம்போஸ் செய்தார். ஆனால் ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 19 வருடங்களுக்கு பின் மீண்டும் கடந்த புத்தாண்டு தினத்தில் பார்த்திபனை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான், 'ஏலேலோ' படத்தை ஞாபகம் வைத்து அந்த படத்தை மீண்டும் தொடரலாம் என்று கூறினாராம். இதனை இயக்குனர் பார்த்திபன் பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இசை சம்பந்தப்பட்ட இந்த படம் மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ட்ரீட் படமான 'சர்வம் தாளமயம்' வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2019ல் ....நேற்றிரவு....A R R !
— R.Parthiban (@rparthiepan) January 4, 2019
அவரே ஆர்வமாக
அதை வாங்கி
இதை எடுத்ததில்
அதுவும் மகிழ்ந்தது
(SELFie RESPECT !!!) pic.twitter.com/oCV7IPCtjz
19 வருடங்களுக்கு முன் துவங்கிய'ஏலேலோ'படத்தின் கதையையும் காட்சிகளையும் எனக்கே ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தி"அந்தப் படம் ஒரு Musical treat விரைவில் செய்வோம், நீங்க தான் வர வர Brisk ஆயிகிட்டு வர்றீங்களே அப்புறமென்ன?"10,000 Watts possitive energy-ஐ charge செய்தனுப்பினார் A R R pic.twitter.com/9T9CEJ6Paw
— R.Parthiban (@rparthiepan) January 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com