ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

கடந்த மூன்று நாட்களாக எந்தவித வன்முறையும் இன்றி கடல் அலைக்கு இணையாக குவிந்து ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் பெரும் ஆதரவு அளித்து வருவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் நாளை ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற மறுத்துவிட்டதை அடுத்து நாளை ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும்...

எங்களை நேரடியாக சந்தியுங்கள். பிரதமர் மோடிக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவசர சட்டம் வராவிட்டால் முதல்வரை முற்றுகையிடுவோம். பிரபல இயக்குனர்

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்

ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்