ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மூன்று நாட்களாக எந்தவித வன்முறையும் இன்றி கடல் அலைக்கு இணையாக குவிந்து ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் பெரும் ஆதரவு அளித்து வருவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான் நாளை ஜல்லிக்கட்டுக்காக உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற மறுத்துவிட்டதை அடுத்து நாளை ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
I'm fasting tomorrow to support the spirit of
— A.R.Rahman (@arrahman) January 19, 2017
Tamilnadu!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments