கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தாஜ்மஹால், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றை மனைவி குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்த கனடா பிரதமர், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிய கனடா பிரதமரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கனடா பிரதமரை தனது சமூக வலைத்தளம் மூலம் வரவேற்றுள்ளார். இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்கிறேன். அருமையான நினைவுகளுடன் கூடிய பயணம் அமைய வாழ்த்துகள். இந்தியாவின் விருந்தோம்பலை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் என எண்ணுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது கனடா தலைநகர் டொரண்டாவின் மேயர் 'கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் குடியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் என்பதும், அந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த ரஹ்மான், தான் தமிழ்நாட்டில் சுற்றத்துடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாக கூறி அந்த அழைப்பை அன்புடன் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com