ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மகத்தான உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு தேவைப்படும் தொகை நிதியாக திரப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் தமிழக அரசு இந்த இருக்கையை பெற ரூ.9.75 கோடி விடுவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியின் முடிவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ் ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார்.
பின்னர் அதே மேடையில் கனடாவில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிஷான் நித்தி, ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்க, அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். ஹார்வர்டில் தமிழ் இருக்கை பெற ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினர் செய்த இந்த உதவி மகத்தான உதவியாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments