ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மகத்தான உதவி

  • IndiaGlitz, [Sunday,October 29 2017]

உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு தேவைப்படும் தொகை நிதியாக திரப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் தமிழக அரசு இந்த இருக்கையை பெற ரூ.9.75 கோடி விடுவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியின் முடிவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ்  ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார்.

பின்னர் அதே மேடையில் கனடாவில் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிஷான் நித்தி, ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்க, அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். ஹார்வர்டில் தமிழ் இருக்கை பெற ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினர் செய்த இந்த உதவி மகத்தான உதவியாக கருதப்படுகிறது.

More News

கமலின் எண்ணூர் விசிட் ஏற்படுத்திய திடீர் மாற்றம்

கடந்த சில வருடங்களாக எண்ணூர் வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுவதை எதிர்த்து

நிக்கி கல்ராணியை தாசில்தாராக மாற்றிய இயக்குனர்

தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஹர ஹர மகாதேவி' பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையான வசூலை கொடுத்தது.

'உறியடி' தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்த 'உறியடி'. அரசியல் த்ரில்லர் படமான இந்த படம் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சமீர் தனது அடுத்த படம்

கமல் களப்பணியால் கலெக்டர் அளித்த அதிரடி வாக்குறுதி

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்தவர் என்ற விமர்சனத்தை உடைக்கும் வகையில் இன்று களப்பணியில் இறங்கினார்.

கிண்டல் செய்த அடையாளத்தை பெருமையாக்கியார் விஜய்: ப.சிதம்பரம் 

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்த வசனங்கள் இருந்தது. இந்த வசனங்களை நீக்க வேண்டும்