அம்பானி மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள் சமீபத்தில் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நீடா அம்பானியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா மற்றும் மகள்கள் காதிஜா, ரஹீனா ஆகியோர் உள்ளனர். இரண்டு மகள்களில் ஒருவர் பர்தா அணிந்தும், ஒருவர் மாடர்ன் உடை அணிந்தும் உள்ளார். இந்த புகைப்படத்துடன் 'சுதந்திரம் என்பது சுயதேர்வே' என்பதை குறிக்கும் #freedomtochoose என்ற ஹேஷ்டேக்கை ரஹ்மான் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்த இந்த புகைப்படம் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments