ரஜினியுடன் இணைந்து ஆன்மீக அரசியல்! பரிசிலீப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

ரஜினியின் ஆன்மீக அரசியல் பொதுமக்களிடையே வரவேற்பையும், அரசியல்வாதிகளிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது குறித்து ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினியின் அரசியல் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் திரையுலகை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு தாராளமாக வரலாம் என தெரிவித்த ரஹ்மான், அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ரஜினியுடன் இணைந்து அரசியல் பணியாற்றுவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க்கவிருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் தெரிவித்தார்

மேலும் சென்னை இந்த நாட்டின் கலாச்சார தலைநகரமாக விளங்குவதாக புகழாரம் சூட்டிய ரஹ்மான், 25 ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.