இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.

சென்னையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை மனைவி சாய்ரா பானுவுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் ரஹ்மானின் சகலையும் நடிகருமான ரகுமானும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

திருமண நாளை அடுத்து ரஹ்மானுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.