ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய பதவி

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகள் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவியை அவருக்கு அளித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில விளம்பர தூதராக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது. சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நேற்று நடைபெற்ற குளிர்கால திருவிழாவில் சிக்கிம் மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் இந்த அறிவிப்பினை அறிவித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் முதலமைச்சர் பவன்குமார் பேசும்போது ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து தங்களை சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறினார். உடனே இன்ப அதிர்ச்சி கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பின்னர் முதல்வரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். உடனே முதல்வர், 'எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக பாடுபடுவோம்' என்றார்.

மேலும் சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக அவர் ஒரு பாடலையும் விரைவில் கம்போஸ் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

மெரினா புரட்சியை கையில் எடுக்கின்றார் பாண்டிராஜ்

பாண்டிராஜ் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு குறித்த தகவல்

ரஜினிகாந்த் கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார்.

தோனி சாதனையை முறியடித்த இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடந்த 5ஆம் தேதி கேப்டவுன் நகரில் தொடங்கிய

தல அஜித்துக்காக வித்தியாசமான கேரக்டர் வைத்திருக்கும் மோகன்ராஜா

சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.