ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய பதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகள் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவியை அவருக்கு அளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில விளம்பர தூதராக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது. சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நேற்று நடைபெற்ற குளிர்கால திருவிழாவில் சிக்கிம் மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் இந்த அறிவிப்பினை அறிவித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் முதலமைச்சர் பவன்குமார் பேசும்போது ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து தங்களை சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறினார். உடனே இன்ப அதிர்ச்சி கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பின்னர் முதல்வரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். உடனே முதல்வர், 'எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக பாடுபடுவோம்' என்றார்.
மேலும் சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக அவர் ஒரு பாடலையும் விரைவில் கம்போஸ் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout