சின்மயி விஷயம் குறித்து ஏ.ஆர்.ரஹைனா கூறும் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Monday,October 22 2018]
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்புடன் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா தனது கருத்தை செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மீடூ விவகாரம் ஒவ்வொன்றாக வெளியே வருவது நல்ல விஷயம் தான். ஒரு பெண் தனது குடும்பத்தை காப்பாற்றவே வெளியில் வந்து வேலை செய்கிறார். அப்படிப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.
சின்மயி இந்த விஷயத்தை தைரியமாக பேசி வருவது நல்ல முயற்சியே. அவருடைய குற்றச்சாட்டை நான் நம்புகிறேன். அவர் மட்டுமின்றி வேறு சில பாடகிகளும் வைரமுத்து குறித்து என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் வைரமுத்து அவர்கள் ஒரு பெரிய மனிதர், தமிழுக்கு ஒரு அடையாளமாக அவர் இருந்தாலும் இந்த விஷயத்தை இவ்வளவு தூரம் வளரவிட்ட பின் வெளிப்படுத்துவது தவறு. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
அதேபோல் வைரமுத்து மீது மட்டும் குற்றஞ்சாட்டி ஒரு நபரை மட்டும் டார்கெட் செய்வதும் தவறுதான். இதேபோல் பலர் தவறுகள் செய்துள்ளனர். அவர்கள் மீது தைரியமாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.