லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் அதிகமான தமிழ்ப்பாடல்கள் பாடியதால் இந்தி பேசும் வட இந்தியர்கள் கோபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி விளக்கமளித்திருந்த போதிலும் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பாடகர்களும், பல திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரசிகர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அவர்களால் தான் நாங்கள் இந்த இடத்தில் இருக்கின்றோம் என்றும், ரசிகர்களுக்கு நேர்மையாகவே நடந்து கொண்டதாகவும், இனியும் அவ்வாறே நடக்கவிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இசைக்கு மொழி என்ற ஒன்றே இல்லை என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும் என்றும் பல திரையுலக பிரமுகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout